வெளிநாட்டு பெண்களை தொடுகை மூலம் துஸ்பிரயோகம் செய்தவர் கைது.

திருகோணமலை-நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேலூர் பகுதியில் வெளிநாட்டு யுவதிகள் இருவரை உடற் தொடுகை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவரை கைது செய்துள்ளதாக நிலாவெளி பொலிசார் தெரிவித்தனர்.

நிலாவெளி- வேலூர் பகுதியில் உள்ள உல்லாச விடுதியில் தங்கியிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 28 வயது மற்றும் 31 வயதுடைய யுவதிகள் இருவர் கடற்கரையோரமாக சென்று கொண்டிருந்தபோது உள்வீதியூடாக வந்த இளைஞர் இரு யுவதிகளையும் உடற் தொடுகை துஷ்பிரயோகம் செய்ததாக நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய சஹ்ரான் என்றழைக்கப்படும் இளைஞரை கைது செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த யுவதிகளையும் சட்ட வைத்திய நிபுணர் அறிக்கையை பெற்றுக் கொள்வதற்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நிலாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டு பெண்களை தொடுகை மூலம் துஸ்பிரயோகம் செய்தவர் கைது.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version