அமைச்சர்கள் இருவர் பதவி விலகினர்

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நாட்டை மீட்பதற்கென அமைச்சு பதவிகளை பெற்றுக் கொண்ட ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோர் தங்கள் அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

ஹரின் பெர்னாண்டோ சுற்றுலா துறை அமைச்சராகவும், மனுஷ நாணயக்கார தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சராகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருந்தனர்.

அமைச்சு பதவிகளை இவர்கள் பெற்றுக் கொண்ட போதும் ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்ற கருத்தை தாம் கொண்டிருப்பதாக தொடர்ச்சியாக கூறி வந்தனர்.

ஏற்கனவே அமைச்சர் பந்துல குணவர்தன தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

அமைச்சர்கள் இருவர் பதவி விலகினர்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version