காலிமுகத்திடலை நோக்கி இராணுவம் செல்கிறது – போலியான செய்தி

காலிமுகத்திடல் போராட்ட களத்தை தகர்க்க இராணுவம் அந்த இடத்துக்கு செல்கிறது என சமூக வலைத்தளங்களில் வெளியாகி வரும் தகவல்களில் உண்மையில்லை என பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறியுள்ளார்.

ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம், காலி முகத்திடல் போன்ற இடங்களிலுள்ள போராட்ட காரர்களை அகற்றுவதற்காக இராணுவம் தயார் செய்யப்பட்டுள்ளது என குரல் பதிவும் பகிரப்பப்ட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் இவ்வாறான வீடியோ மற்றும் குரல் பதிவுகள் வேறு விடயங்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளன என ஜெனரல் ஷவேந்திர சில்வா மேலும் கூறியுள்ளார்.

காலிமுகத்திடலை நோக்கி இராணுவம் செல்கிறது - போலியான செய்தி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version