அங்கங்களை துண்டிக்கும் தண்டனைகள் தொடரும் – தலிபான்கள்

அங்கங்களை துண்டிப்பது போன்ற கடுமையான தண்டனைகள் தொடரும் என தலிபான்களின் அரச தலைவர் ஒருவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான் அமைப்பை நிறுவியவர்களுள் ஒருவரான முல்லா நூருதீன் துராபியால் அண்மையில் ஏபி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தலிபான்களின் ஆட்சியில் முன்பு இருந்தது போலவே அங்கங்களை துண்டிப்பது போன்ற கடுமையான தண்டனைகள் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், நாங்கள் முஸ்லிம்கள் குர்ஆனிற்கு அமையவே எமது சட்டங்கள் அமைக்கப்படும் அவை மரணதண்டனையாக கூட இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த முறை நடைபெற்ற தலிபான் ஆட்சியில் நீதியமைச்சராக பதவி பெற்றிருந்த முல்லா நூரூதீன் தற்போதைய ஆட்சியில் சிறைச்சாலைகளுக்கு பொறுப்பாகவுள்ளார்.

தலிபான் ஆட்சியானது முன்பிருந்ததை விட மாறுபடும் எனவும் உலகத்தோடு ஒத்திருக்கும் எனவும் சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் தலிபான்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிவரும் நிலையில் தலிபான்களால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டள்ளது.

அங்கங்களை துண்டிக்கும் தண்டனைகள் தொடரும் - தலிபான்கள்
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version