ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மாலைதீவுகளுக்கு சென்றுள்ளார். இராணுவத்தின் ஜெட் விமானம் மூலமாக இன்று காலை மாலைதீவுகளை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது. ஜனாதிபதியின் மனைவியும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளும் அவருடன் சென்றுள்ளனர்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடக அவர்கள் வெளிநாடு சென்றுள்ளனர். மாலைதீவுகளின் வெலினா விமான நிலையத்தில் அதிகாலை 3.07 இற்கு விமானம் தரையிறங்கியுள்ளது. மாலைதீவு தலைநகரத்தில் கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் மாலைதீவு செய்திகள் தெரிவிக்கின்றன.
வேறு ஒரு நாட்டுக்கு செல்வதற்கு முன்னர் மாலைதீவுக்கு சென்று அங்கிருந்து வேறு நாடொன்றுக்கு செல்லவிருப்பதாகவும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
விமானப்படை, ஜானதிபதியும் அவரது பாரியாரும் வெளிநாடு செல்வதற்கு விமானத்தினை வழங்கியதாக உறுதி செய்துள்ளது. ஜனாதிபதியின் நிறைவற்று அதிகாரங்கள் மூலமாக விமானத்தினையும், விமான நிலையமூடாக செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
