ஜனாதிபதி மாலைதீவு சென்றுவிட்டதாக தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அங்கிருந்து அவர் தென்கிழக்காசிய நாடு ஒன்றுக்கு செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இன்று மாலை மாலைதீவிலிருந்து வியட்நாம் நோக்கி செல்லவுள்ளதாக, ஊடகமொன்று வெளிநாட்டு தகவல்களை மேற்கோள் காட்டை செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் செல்ல வேண்டிய இறுதி இடத்துக்கு சென்றதன் பின்னரே பதவி விலகல் கடிதம் சபாநாயகரிடம் கடிதம் கையளிக்கப்படுமென செய்திகள் வெளியாகியுள்ளன.
