பிரதமரின் உத்தியோகபூர்வ அலுவலகமான அலரிமாளிகை முன்னதாக மிக பெரியளவிலான மக்கள் கூட்டம் சேர்ந்துள்ளது. பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு கோரிக்கை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், முப்படைகள் என கடும் பாதுகாப்பு அலரி மாளிகையின் சுற்று புறமெங்கும் குவிக்கப்பட்டுள்ளது. கடும் பாதுகாப்புக்கு மத்த்தியிலும் மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கண்ணீர் குண்டு புகை தாக்குதல், நீர் தாக்குதல் எனபன நடைபெறுகின்றன. போராட்டக்காரர்கள், பாதுகாப்பு துறையினர் என இரு பக்கமாகவும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
