மிஸ்டர் ரணில்; ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுங்கள் – மனோ

பிரதமர் பதவியிலிருந்து உடனடியாக விலகிவிட்டு பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தெரிவிக்கு போட்டியிடுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கனேசன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதியாவதற்கு விருப்பம் என்றால், பாராளுமன்றத்தில் போட்டியிடலாம். அதனை விடுத்து மக்களை கோவப்படுத்தி, பிரச்சினைகளை அதிகரிக்காமல் உடடனடியாக பதவி விலகுங்கள் என ட்விட்டர் மூலமாக இந்த செய்தியினை தெரிவித்துள்ளார்.

அமைதியான போராட்டத்துக்கு இடம் கொடுக்குமாறும் மனோ கணேசன் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மிஸ்டர் ரணில்; ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுங்கள் - மனோ
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version