பாதுக்காப்பு படைகளது அறிக்கை

முப்படைகளது தளபதிகள், பொலிஸ் மா அதிபர் ஆகியோருடன் பாதுகாப்பு தலைமை அதிகாரி ஷவேந்திர சில்வா இணைந்து மக்களை அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சட்டம், ஒழுங்கை நடைமுறைப்படுத்த தமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உடனடியாக கட்சி தலைவர்களது கூட்டத்தை கூட்டி, ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கலுக்கு ஒரு முடிவினை ஏற்படுத்துமாறும், அதனை தமக்கு அறிய தருவதோடு மக்களுக்கு அறிவிக்குமாறும் சபாநாயகரிடம் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இன்று பதவி விலகுவதாக சபாநாயகர் தமக்கு அறிவித்துள்ளதாகவும், அதன் பின்னர் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது என்பது தொடர்பிலும் தெளிவுபடுத்துமாறும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

புதிய ஜனாதிபதி நியமிக்கப்படும் வரை மக்கள் யாருக்கும் தீங்கிழைக்க வேண்டாமெனவும், தனி நபர் சொத்துக்களுக்கோ, அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க வேண்டாம் எனவும் மக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாதுக்காப்பு படைகளது அறிக்கை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version