மாலைதீவுக்கு ஜனாதிபதி சென்றுள்ள நிலையில் அங்கு போராட்டங்கள் நடைபெறுகின்றன. உடனடியாக அவரை அங்கிருந்து வெளியேற்றுமாறு போராட்டங்கள் நடைபெறுகின்றன.
இன்று மாலைதீவிலிருந்து அவர் வெளியேறுவார் என செய்திகள் பரவி வருகின்றன. அங்கிருந்து தென்கிழக்காசிய நாடு ஒன்றுக்கு செல்லவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் சிங்கப்பூர் அல்லது வியட்நாம் நாட்டுக்கு செல்லலாம் என ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இவ்வாறான சூழலில் மாலைதீவில் போராட்டங்களில் ஈடுபடும் இலங்கையரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அங்குள்ள எதிர்க்கட்சியினர் என்ன அடிப்படையில் நாட்டுக்குள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனுமதிக்கப்பட்டார் என கேள்வியெழுப்பியுள்ளதாகவும் மாலைதீவு செய்திகள் தெரிவிக்கின்றன.
