இலங்கைக்கு அவசிய தேவைகளுக்கு மட்டும் செல்லவும் – சுவிஸ் அரசு

இலங்கையில் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளமையினால் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே செல்லவுமென ஸ்விஸ் அரசு அறிவித்துள்ளது.

இலங்கைக்கு அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே செல்லுமாறும், சுற்றுலா மற்றும் தேவையற்ற பயணங்களுக்காக செல்ல வேண்டாமெனவும் தனது நாட்டு மக்களுக்கு சுவிற்சலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.

தமது உத்தியோகபூர்வ இணையதளத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் அரசியல் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளமையினால் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது. அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே பாதுகாப்பான சூழல் இலங்கையில் இல்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அவசிய தேவைகளுக்கு மட்டும் செல்லவும் - சுவிஸ் அரசு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version