ஜனாதிபதி மாலைதீவிலிருந்து, சிங்கப்பூர் பயணிக்க தயாராகிறார் என்ற செய்திகள் மீண்டும் ஆரம்பித்துள்ளன. நேற்று காலை முதல் ஆரம்பித்த இந்த கதை நேற்று நள்ளிரவு தனி விமானம் கோரினார் என்ற கதையுடன் தொடர்ந்தது.
இந்த நிலையில் தற்போது தனி விமானம் மாலைதீவில் தரையிறங்கியுள்ளதாகவும், ஜானதிபதி பயணத்தை ஆரம்பிக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்திகள் தகவல்களாகவே பகிரப்படுகின்றன. உறுதிப்படுத்திய தகவல்கள் வெளியாகவில்லை.
சர்வதேசம் இலங்கை பிரச்சினை தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடுகளில் தஞ்சம் அடைவதில் சிக்கல்களை எதிர் நோக்குவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
ஏற்கனவே அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் அந்த நாடுகளுக்கு செல்ல மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் பிற நாடுகளும் மறுப்பு தெரிவிக்கும் நிலை காணப்படுவதாகவும் சர்வதேச அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
