ஜனாதிபதி, கடிதத்தை விரைவில் அனுப்புவதாக தெரிவித்தார் – சபாநாயகர்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ விரைவில் அவரது இராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்புவதாக கூறியுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. உடனடியாக பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைக்குமாறு சபாநாயகர் ஜனாதிபதியிடம் கோரியதாகவும், தான் அழுத்தில் இருப்பதாகவும், விரைவில் கடித்ததை அனுப்புவதாகவும் ஜனாதிபதி கூறியதாக சபாநாயகரை மேற்கோள்காட்டி அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நியமித்து விட்டு ஜனாதிபதி வெளிநாடு சென்றுள்ள நிலையில், அவர் பதவியினை விட்டு விலகியுள்ளார் என்ற முடிவுக்கு வர முடியுமா என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தன சட்ட ஆலோசனையினை பெற்று வருவதாக ஊடகமொன்றுக்கு சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கடிதம் வழங்கப்படாத நிலையில் நாளை பாராளுமன்றத்தை கூட்டுவதிலும் சிக்கல் நிலை ஏற்படலாம் எனவும் கருத்து வெளியிடப்படுகிறது.

ஜனாதிபதி, கடிதத்தை விரைவில் அனுப்புவதாக தெரிவித்தார் - சபாநாயகர்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version