இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியிலிருந்து விலகியுள்ளதாக பாராளுமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாரளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசாநாயக்கே இன்று(16.07) காலையில் பாரளுமன்றம் கூடிய போது இதனை அறிவித்தார். 1981 ஆம் ஆண்டு விசேட காரணுங்களுக்கான ஜனாதிபதி தேர்தல் சட்ட சரத்து 02 இன் படி ஜனாதிபதி தெரிவு இரகசிய வாக்கெடுப்பின் மூலம் நடைபெறவுள்ளதாகவும் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் பாரளுமன்றம் கூட்டப்பட்டு, ஜனாதிபதி பதவி விலகல் தொடர்பில் அறிவிப்பதாக இருந்த போதும், பதவி விலகல் கடிதம் சபாநாயகருக்கு கிடைப்பதற்கு தாமதம் ஆகியதனால் இன்று பாரளுமன்றம் கூட்டப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று(15.07) காலையில் ஜனாதிபதியின் பதவி விலகலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தன நாட்டு மக்களுக்கு அறிவித்திருந்தார்.
19 ஆம் திகதி ஜனாதிபதி தெரிவுக்கு பெயர்கள் வழங்கப்பட்டு 20 ஆம் திகதி
இரகசிய வாக்கெடுப்பின் மூலம் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படவுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக சஜித் பிரேமதாசாவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பகா டலஸ் அலகப்பெருமவும் தாங்கள் ஜனாதிபதி தெரிவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன செயலாளர் சாகல காரியவசம், தமது கட்சி ரணில் விக்ரமசிங்கவுக்கே ஆதரவு வழங்கும் என தெரிவித்துள்ளார்.
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தான் போட்டியிடுவது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
