ஜனாதிபதி போட்டிக்கான தெரிவு மேலும் அதிகரித்துள்ளது. மூவர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். நான்காமவர் களமிறங்குவார் என்பது அனைவரும் தெரிந்த நிலை.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸ்ஸாநாயக்கே ஜனாதிபதிக்கான தெரிவில் போட்டியிடவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி இன்று அறிவித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் பாரளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும, ஐக்கிய மக்கள் கூட்டணியின் பாரளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச ஆகியோர் தாம் போட்டியிடுவதனை அறிவித்துள்ளனர். இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு என அந்த கட்சியின் செயலாளர் அறிவித்துள்ளார்.
