இலங்கை பெற்றோலிய நிலைய வரிசைகள் அகற்றப்படும்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிலையங்களில் வரிசையில் நிற்கவேண்டாமென வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார்.

வரிசையில் நிறுத்தப்பட்டுள்ள சகல வாகனங்களும் அகற்றப்பட்ட பின்னர், புதிய பதிவு நடைமுறையின் அடிப்படையில் பெற்றோல் விநியோகம் இடம்பெறுமென ட்விட்டர் தகவல் மூலமாக அறிவித்துள்ளார். சரியான வினியோக திகதி விரைவில் அறிவிக்கப்படுமென அவர் மேலும் கூறியுள்ளார்.

புதிய இணைய வழி பதிவு முறையை நடைமுறைப்படுத்துவது இலகுவானதல்ல எனவும், மக்களின் ஆதரவு தேவை எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை பெற்றோலிய நிலைய வரிசைகள் அகற்றப்படும்.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version