ஜனாதிபதி செயலகத்தில் குற்றவியல் செயல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பில் விசாரணைக்கு சென்ற தடய மற்றும் தொழில்நுட்ப பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தமையினாலேயே போராட்ட காரர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைளை மேற்கொள்ள இடையூறாக ஜனாதிபதி செயலகத்தில் சட்டவிரோதமாக காணப்பட்ட போராட்ட காரர்களை வெளியேற்றும் விசேட நடவடிக்கைகளை முப்படைகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்டதாகவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.