இலங்கை – பாகிஸ்தான் சமபல நிலையில் முதல் நாள்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் இன்று(27.07) காலை ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. இலங்கை அணி 86 ஓவர்களில் 315 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது, துடுப்பாடி வரும் இலங்கை அணி சிறப்பான ஆரம்பம் ஒன்றை பெற்ற போதும், அடுத்தடுத்த மூன்று விக்கெட்களை இழந்தமையினால் தடுமாறும் நிலை ஏற்பட்டது. இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்கள் அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் டினேஷ் சந்திமால் ஆகியோரது இணைப்பாட்டம் மூலம் இலங்கை அணி மீண்டு வந்த நிலையில் மத்தியூஸ் ஆட்டமிழந்தார். இலங்கை அணிக்காக தொடர்ந்தும் ஓட்டங்களை பெற்று வரும் டினேஷ் சந்திமால் தொடர்ச்சியான ஐந்தாவது 50 இற்கு மேற்பட்ட ஓட்ட எண்ணிக்கையினை பெற்று ஆட்டமிழந்தார். சந்திமால், தனஞ்சய டி சில்வா ஆகியோரது இணைப்பாட்டம் மீண்டும் இலங்கை அணியினை நம்பிக்கையான நிலைக்கு உயர்த்தியது.

இறுதி நேரத்தில் பெறப்பட்ட ஓட்டங்கள் மூலமாக இலங்கை அணி போராடக் கூடிய ஓட்ட எண்ணிக்கையினை பெற்றுள்ளது. இருப்பினும் நாளையதினம் மேலும் ஓட்டங்களை பெற்று பலமான நிலைக்கு சென்றால் மட்டுமே பாகிஸ்தான் அணிக்கு அழுத்தங்களை வழங்க முடியும்.

பாகிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் இலங்கை அணிக்கு அழுத்தங்களை வழங்கி வருகின்றனர்.

இலங்கை அணியின் துடுப்பாட்ட ஆரம்பத்தில் அரைச்சதத்தை பூர்த்தி செய்த வேளையில் ஓஷத பெர்னாண்டோ ஆட்டமிழந்தார். அவரும் திமுத் கருணாரட்னவும் 76 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். இருப்பினும் அடுத்தடுத்த இரண்டு விக்கெட்களை இலங்கை அணி இழந்த தடுமாறியது. மதிய போசனத்துக்கு பின்னர் மீண்டும் போட்டி ஆரம்பித்த வேளையில் தேவையற்ற துடுப்பாட்ட பிரயோகம் மூலமாக அணியின் தலைவர் திமுத் கருணாரட்ன ஆட்டமிழந்தார். அதன் பின்னர் இணைப்பாட்டம் கட்டியெழுப்பப்படட்டு நகர்ந்து செல்லும் வேளையில் அஞ்சலோ மத்தியூஸ் ஆட்டமிழந்தார்.

இந்த போட்டியில் இரு அணிகளும் தலா இவ்விரு மாற்றங்களை செய்து விளையாடுகின்றன. பாகிஸ்தான் அணி சார்பாக உபாதையடைந்த ஷஹின் ஷா அப்ரிடிக்கு பதிலாக நௌமன் அலி இணைக்கப்பட்டுள்ளார். அஷார் அலி நீக்கப்பட்டு, பவாட் அலாம் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணி சார்பாக கஸூன் ரஜித்த நீக்கப்பட்டு, அசித்த பெர்னாண்டோ சேர்க்கப்பட்டுள்ளார். மகேஷ் தீக்க்ஷனுக்கு பதிலாக இலங்கை அணியின் இளம் சகலதுறை வீரர் டுனித் வெல்லாலகே சேர்க்கப்பட்டுள்ளார்.

போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர், தனது நூறாவது போட்டியில் விளையாடும் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மத்தியூசுக்கு இலங்கை கிரிக்கெட் கெளரவம் வழங்கியிருந்தது. இலங்கை அணியின் முன்னாள் வீரர் சமிந்த வாஸ் மற்றும் இலங்கை கிரிக்கெட் உபதலைவர் ஜெயந்த தர்மதாச ஆகியோர் இந்த கெளவரத்தை வழங்கியிருந்தனர்.

35 வயதான மத்தியூஸ், 2009 ஆம் ஆண்டு இதே மைதானத்தில், இதே பாகிஸ்தான் அணியுடனேயே டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டார் என்பது முக்கிய வியிடம்.

அந்தப் போட்டியில் 42 மற்றும் 27 ஓட்டங்களை அவர் பெற்றுக் கொண்டார். 1 விக்கெட்டினையும் கைப்பற்றிக் கொண்டார். இலங்கை அணி 50 ஓட்டங்களினால் அந்தப் போட்டியில் வெற்றி பெற்றது. மதித்தியூஸ் இதுவரை 99 போட்டிகளில் 176 இன்னிங்சில் 6876 ஓட்டங்களை பெற்றுள்ளதோடு, 33 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார். 13 சதங்களையும், 38 அரைச்சதங்களையும் அவர் பெற்றுள்ளார்.

 வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
1ஓஷத பெர்னாண்டோபிடி –  மொஹமட் ரிஸ்வான்மொஹமட்  நவாஸ்507043
2திமுத் கருணாரட்ணபிடி –  நசீம் ஷாயாசிர் ஷா409030
3குசல் மென்டிஸ்Run Out031000
4அஞ்சலோ மத்யூஸ்பிடி –   மொஹமட் ரிஸ்வான்நௌமன் அலி4210650
5தினேஷ் சந்திமல்பிடி -பவாட் அலாம்மொஹமட்  நவாஸ்8013792
6தனஞ்சய டி சில்வாBowledநசீம் ஷா 336031
7நிரோஷன் டிக்வெல்ல  423321
8டுனித் வெல்லாலகே  060910
9ரமேஷ் மென்டிஸ்      
10பிரபாத் ஜயசூரிய      
11அசித்த பெர்னாண்டோ      
 உதிரிகள்  19   
 ஓவர் 86விக்கெட் – 06மொத்தம்315   
        
 பந்துவீச்சாளர்ஓவர்ஓ.வி
1ஹசன் அலி1203450
2நசீம் ஷா 1203341
3நௌமன் அலி2102641
4அஹா சல்மான்0600250
5மொஹமட்  நவாஸ்1702712
6யாசிர் ஷா1801671
இலங்கை - பாகிஸ்தான் சமபல நிலையில் முதல் நாள்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version