ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் உள்ளதாக அறியமுடிகிறது. தொடர்ச்சியாக இந்த சிக்கல்கள் அண்மைய காலங்களாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையத்தினை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கிய ஒப்பந்தம் தொடரில் பங்காளி கட்சிகள் அதிருப்தியடைந்துள்ளன. இந்த விடயம் தொடர்பாக பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் சரியான முடிவுகள் எட்டப்படவில்லை.
இந்த நிலையில் ஜனாதிபதி நாடு திரும்பியதும் ஆளும் கட்சியின் பங்காளி கட்சிகளின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து பேசவுள்ளார்கள்.
ஆட்சி, தலைமை பொறுப்பு வழங்கல் என்பனவும் இந்த பிரச்சினைகள் தொடர்வதற்கு காரணமாக இருக்கலாமென அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
