இலங்கை ஆசிரியர் சங்க பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று(03.08) கைது செய்யப்பட்டமைக்கு மனித உரிமை பாதுகாவலர்களுக்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் மேரி லவ்லோர் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
ஜோசப் ஸ்டாலின் போன்றவர்களின் செயற்பாடுகள் இந்த காலத்தில் முக்கியமானது எனவும், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் காப்பாற்றப்பபடவேண்டும் எனவும், தண்டிக்கப்படக்கூடாது எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் 28 ஆம் திகதி நீதிமன்ற அறிவிப்பினை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக பொலிஸார் இலங்கை ஆசிரியர் சங்க பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலினை கைது செய்தனர்.
