இன்று பிற்பகல் கொழும்பு, கல்கிஸ்ஸை நீதிமன்றினுள் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. வழக்கு விசாரணையின் போது, நீதிபதிக்கு முன்னாள் வழக்கின் சாட்சி காரர் மீதே துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இருப்பினும் துப்பாக்கி சூட்டில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
சந்தேக நபர் நீதிமன்றத்தினுள் பார்வையாளர் பகுதியினுள் அனைவரோடும் அமர்ந்திருந்து விட்டு, குறித்த வழக்கின் சாட்சிக்காரர் சாட்சி கூட்டினுள் சென்ற போதே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.
துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் நீதிமன்றத்தினுள் இருந்து தப்பித்து சென்ற அதேவேளை, வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளார்.
பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.