தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்துக்காக வழங்கப்படும் QR குறியீட்டினை யாருக்கும் தெரியாத வகையில் பாதுக்காப்பாக வைத்திருக்குமாறு வலுசகதி மற்றும் மின்சத்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர அறிவுறுத்தியுள்ளார்.
இந்த செயலி மற்றும் QR குறியீட்டினை அவதானமாக செயற்படுமாறு வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ள அதேவேளை ஏனைய தரப்பினர் பெற்றுக்கொள்ளும் வகையில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை (QR குறியீட்டினை) காட்சிப்படுத்துவதனை தவிர்க்குமாறும் அவர் எரிபொருள் பாவனையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
QR குறியீட்டினை ஏனைய நபர்கள் பெற்றுக்கொள்ளாத வகையில் பாதுகாப்பாக வைத்திருக்குமாறும், இதன் மூலம் மோசடிகள் ஏற்படாத வகையில் தடுக்குமாறும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
