மாகாணங்களுக்கிடையில் சேவைகளில் ஈடுபடும் தூர பேரூந்துகள் இன்று நள்ளிரவு முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக மாகாண போக்குவரத்து பேரூந்து சங்கம் தெரிவித்துள்ளது.
தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்தின் மூலம் 40 லீட்டர் டீசல் மாத்திரமே வழங்கப்படுவதாகவும் தூர போக்குவரத்துக்களில் ஈடுபடும் பேரூந்துகளுக்கு இந்த அளவு போதாது எனவும் குறித்த சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபையில் எரிபொருள் நிரப்புவது நடைமுறை சாத்தியமற்றது. அவர்களது வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகின்றனர். அனேகமான டிப்போக்கள் எரிபொருள் வழங்க இலஞ்சம் கோருகின்றனர். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் முழு தாங்கி எரிபொருள் வழங்குமாறு கோரிக்கை முன் வைத்தும் அது நடைபெறவில்லையெனவும் சரத் விஜித குமார மேலும் தெரிவித்துள்ளார்.
தாங்கள் வரிசைகளில் நின்று போக்குவரத்தில் ஈடுபட முடியாது எனவும் மேலும் அவர் கூறியுள்ளார்.
