இந்தவாரத்துக்கான எரிபொருள் அளவு இன்று(07.08) நள்ளிரவு முதல் சகலருக்கும் புதுப்பிக்கப்படுமென வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவு வழங்கப்படும் இந்த புதிய அளவு அடுத்த வார முடிவு வரை அதாவது ஞாயிற்றுக்கிழமை வரை அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் கிடைத்த தரவுகளின் படி மாற்றங்கள் செய்யப்பட்டு மேலும் இந்த செயலி மேம்படுத்தப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நிறைவடைந்த இந்த வாரத்துக்கான புள்ளி விபரத்தையும் அமைச்சர் காஞ்சன விஜயசேகர வெளியிட்டுள்ளார்.
