இலங்கை கிரிக்கெட் 20-20 தொடர் இரண்டாம் போட்டி ஸ்ரீலங்கா கிரிக்கெட் நீலம் மற்றும் பச்சை அணிகளுக்கிடையில் நடைபெற்றது. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நீல அணி 32 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நீலம் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய நீலம் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 122 ஓட்டங்களை பெற்றது. இதில் அஷேன் பண்டார ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களை பெற்றார். சரித் அசலங்க 23 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் ஜப்ரி வண்டெர்செய் 3 விக்கெட்களையும், பினுற பெர்னாண்டோ, லக்ஷன் சண்டகன், தனஞ்சய லக்ஷன், ரமேஷ் மென்டிஸ், நுவான் துஷார ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய பச்சை அணி 18.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 90 ஓட்டங்களை பெற்றது. இதில் தஸூன் சானக்க 37 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
பந்துவீச்சில் டில்ஷான் மதுசங்க, பிரவீன் ஜெயவிக்ரம, சுமிந்த லக்ஷன் ஆகியோர் தலா 02 விக்கெட்களையும், தனஞ்சய டி சில்வா, கசுன் ரஜித, சமிக்க கருணாரட்ன ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
