இலங்கையில் கொவிட் இறப்புகள் அதிகரித்து வருகின்றன.

கொவிட இலங்கையில் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், நேற்று (08.08) 6 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுகாதா சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். இந்த இறப்புகளோடு 16,594 இறப்புகள் மொத்தமாக இலங்கையில் ஏற்பட்டுள்ளன.

இறந்தவர்களில் நான்கு ஆண்களும், இரண்டு பெண்களும் உள்ளடங்குவதாக என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஐவர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும், ஒருவர் 30-59 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் 214 பேர் சோதனைகளில் தொற்றுக்குள்ளானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் கொவிட் இறப்புகள் அதிகரித்து வருகின்றன.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version