இலங்கைக்கு ஆதரவு – நோர்வே தமிழ் MP கம்ஷாயினி

இலங்கைக்கான ஆதரவினை தொடர்ந்து வழங்குமாறு நோர்வே அரசாங்கத்தை கோருவேன் என அண்மையில் நோர்வே பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட இலங்கை தமிழரான கம்ஷாயினி குணரட்ணம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இலங்கையில் நடைபெற்ற போர் குற்றம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம், எந்த பதில்களும் இல்லாமல் அந்த விசாரணைகளை முடிக்க இயலாது. வெளிநாட்டு தலையீடுகள் இன்றி விசாரணைகளை நிறைவு செய்து முடிவொன்றினை வழங்க வேண்டும். வெளிநாட்டு அழுத்தங்களுக்காக காத்திருக்க கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை சந்திப்பதற்கு தான் தயாராக இருப்பதாகவும், அதற்கான அழைப்பு கிடைத்தால் தான் நிச்சயம் சந்திப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையை புறக்கணிப்பது நல்ல விடயமல்ல. முன்னோக்கி செல்ல வேண்டும். கல்வி மற்றும் வர்த்தக துறையில் நோர்வே அரசு இலங்கைக்கு உதவி செய்ய வேண்டும். அது தொடர்பில் தனது கட்சியோடு தான் பேசவுள்ளதாகவும் நோர்வே பாராளுமன்ற உறுப்பினர் கம்சி குணரட்ணம் தெரிவித்துள்ளார்.

இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்து நோர்வேயில் குடியேறிய 33 வயதான கம்ஸாயினி குணரட்ணம் ஆளும் லேபர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு ஆதரவு - நோர்வே தமிழ் MP கம்ஷாயினி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version