போதை, ஆயுத கடத்தல் சந்தேகநபரான புலி உறுப்பினரின் பிணை மறுப்பு

இலங்கை மீனவ படகு ஒன்றிலிருந்து பெரும் தொகையான போதைப் பொருட்கள், AK-47 ரக துப்பாக்கிகள் ஐந்து, 9mm துப்பாக்கி ரவைகள் 1000 என்பனவற்றை கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் திகதி இந்திய கடலோர காவற் துறையினர் கைப்பற்றியிருந்ததனர். குறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரமேஷ் கோரிய பிணை, கேரள நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குற்றம் சுமத்தப்பட்டவர் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலி அமைப்பினது நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் என இந்திய தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

மினிக்காய் தீவில் வைத்து ரவிஹன்சி எனும் படகு இந்திய கடலோர காவற் பிரிவினரினால் கைப்பற்றப்பட்டது. உரிய ஆவணங்களின்றி ஆறு பேர் அந்த படகிலிருந்த நிலையில் கொச்சி போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் திருவானந்தபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இந்திய அரசாங்கத்தின் அறிவுரைக்கு அமைவாக இந்திய தேசிய புலனாய்வு பிரிவினர் ரமேஷ் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரை ஏழாவது, எட்டாவது சந்தேக நபர்களாக கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தீவிர உறுப்பினர்கள் எனவும், அவர்கள் விடுதலைப் புலிகளது உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி பணப்பரிமாற்றங்களை செய்து போதை மற்றும் ஆயுத கடத்தல்களில் ஈடுபட்டு வந்தனர் என மேலும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் சட்டவிரோத பணபரிமாற்றங்களை செய்து வழங்கியவரும் சாட்சியமளித்ததனை தொடர்ந்து ரமேஷின் பிணையினை நீதிமன்றம் இரத்து செய்துள்ளது. இந்த செய்தியினை இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version