பல்கலை மாணவர்களது போராட்டம் மீது தாக்குதல்

கொழும்பு 07 பகுதியில் நடைபெறும் போராட்டத்தின் மீது பொலிஸாரினால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த இந்த போராட்டத்தின் மீது கண்ணீர் புகை குண்டு தாக்குதல் மற்றும் தண்ணீர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தோடு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்துக்கு எதிராக, பொலிஸாரின் அனுமதியினை மீறி இந்தப் போராட்டம் நடாத்தப்படுகின்றது. நாட்டின் சூழ்நிலை இயலபுக்கு திரும்புவதனால் இன்று நிறைவடையும் அவசரகால சட்டம் நீடிக்கப்படாது என ஜனாதிபதி கூறியுள்ள நிலையில் இன்றைய போராட்டம் நடைபெறுகிறது.

நிலுவையிலுள்ள பிடிவிறாந்துக்காக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே இந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரோடு மேலும் ஐவர் கைது செய்யப்பட்டுளளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version