கடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க ஜப்பானிடம் கோரிக்கை.

இலங்கை, கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் கோரிக்கை ஒன்றினை ஜப்பானிடம் முன் வைக்கவுள்ளதாகவும், இது தொடர்பான பேச்சுவார்தைகளுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரும் மாதம் ஜப்பான் பயணிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் அடங்கலாக இந்தப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறே இலங்கை அரசு ஜப்பான் அரசிடம் கோரவுள்ளது. ஜனாதிபதி ரணில் ஜப்பான் பயணத்தின் போது ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவை சந்தித்து இந்த விடயங்கள் தொடர்பில் பேசுவாரெனே அறியப்படுகிறது. இதேவேளை கொலை செய்யப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேயின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ஜப்பான் பயணிக்கவுள்ளதாக ஜனாதிபதி செயலக பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version