தொண்டைமானாறு வல்லை ரோட்டில் வசிக்கும் குருமூர்த்தி மயில்வாகனம், வயது 74 உடைய இவர் ஆகஸ்ட் 17, புதன் கிழமையிலிருந்து (கடந்த 3 நாட்களாகக்) காணமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காணமல் போகும் போது நீல நிற சாரம், நீல நிற பனியன் அணிந்திருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 5 அடி 9 அங்குல உயரமும், பொது நிறமுமும் நரைத்த தலை மயிருமுடைய இவருக்கு உச்சியில் வழுக்கை உண்டு. அத்தோடு இவரின் கழுத்து சிறிது கூனலாக இருக்கும். இவரைப் பற்றிய தகவலேதும் அறிந்தவர்கள் கீழே தரப்பட்டிருக்கும் தொலைபேசிகளுக்கு அழைத்து விபரங்களைத் தந்துதவுமாறு உறவினர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
தொடர்பு இலக்கம்:
0753996654
0774206565
0770780778
