முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க இன்று கொழும்பு சிட்டி சென்டரில் அமைந்துள்ள திரையரங்கிற்கு தனது திரைப்படத்தை பார்வையிட சென்றுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் சிறை தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலை அதிகாரிகளினால் வழங்கப்பட்ட விசேட அனுமதியின் கீழ் அவர்களது பாதுகாப்போடு அவரது புதிய திரைப்படத்தை பார்வையிட்டுள்ளார்.
அண்மையில் அவரது புதிய திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. இன்று குறித்த திரைப்படத்தின் கதாநாயகன் திரையரங்கிற்கு சென்ற நிலையில் அவரது ரசிகர்கள் அவரை புகைப்படும் எடுத்தும், வீடியோ எடுத்தும் மகிழ்ந்தனர். இலங்கை சிங்கள திரையுலகின் முதன்மை நடிகராக திகழ்பவர் ரஞ்சன் ராமநாயக்க.