ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(23.08) சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.
அனைத்து கட்சி அரசாங்கம் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சரவையில் தாம் பங்கேற்க மாட்டோம் எனவும், அனைத்து கட்சி அரசாங்கத்தின் சிறந்த செயற்பாடுகளுக்கு எதிர்க்கட்சியாக ஆதரவு வழங்குவதாக சஜித் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அனைத்து கட்சி அரசாங்கத்தில் சிறிய அமைச்சரவையினை நிறுவுமாறும், மக்கள் மீது சுமையினை திணிக்க வேண்டாமெனவும் எதிர்க்கட்சி சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.