வெளிநாட்டு பெண்ணை வெளியேற்ற ஜனாதிபதி கட்டளையிடவில்லை

பிரித்தானிய பெண் ஒருவர் இலங்கையில் ஆர்பாட்டங்களுக்கு ஆதரவு வழங்கியமைக்காக அவரது இலங்கை விசா இரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இவ்வாறன நிலையில் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு வழங்கியமைக்காக அவரது விசா இரத்து செய்யப்படவில்லை எனவும், மருத்துவ சிகிச்சைக்காகவென கூறி அவர் விசா பெற்றுளளதாகவும், ஆனால் அவர் மருத்துவ சிகிச்சை எதனையும் பெறவில்லையெனவும், மாறாக அவர் மனநல சிகிச்சை வழங்குகின்றமை விசாரணைகளில் தெரிய வந்ததாகவும் அதன் காரணமாகவே அவரின் விசா இரத்து செய்யப்பட்டதாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்திருந்தது.

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்துக்கு பொறுப்பான அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே குறித்த பெண்ணை நாட்டை விட்டு வெளியேற்ற கட்டளையிட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

அவ்வாறு ஜனாதிபதி கட்டளை எதனையும் இடவில்லையென வெளியாகிய செய்தியினை ஜனாதிபதி அலுவலகம் மறுத்துள்ளது. அவ்வாறு ஜனாதிபதி எந்த உத்தரவினையும் பிறப்பிக்கவில்லை என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அந்த பெண்மணியின் விசாவினை இரத்து செய்து நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவித்த பின்னர் அவர் அதற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்வதற்கான மனுதாக்கல் செய்திருந்தார். நீதிமன்றம் அந்த மனுவினை விசாரணைக்கு எடுக்காமலேயே இரத்து செய்தது. அதன் பின்னர் அந்த பெண்மணி காணாமல் போயுள்ளதாக ஊடமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version