வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்பவர்களுக்கு விரைவு கடவுச்சீட்டு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடி செல்பவர்களுக்கு விரைவாக கடவுச்சீட்டினை வழங்கும் தனியான கருமபீடம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான அமைச்சர் மனுஷ நாணயக்கார வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்துடன் நடாத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இந்த அனுமதி அமைச்சரினால் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் இந்த பிரத்தியோக கரும பீடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை வேலை வாய்ப்பு பணியகத்தினால் வழங்கப்படும் கடிதத்தை வழமையான ஆவணங்களுடன் வழங்குவதன் மூலம் விரைவான சேவையினை பெறுவதுடன், விரைவாக கடவுச் சீட்டினையும் பெற முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version