ஜனாதிபதி – ஆளும் கட்சி விஷேட கூட்டம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்  பாராளுமன்ற குழுவினருக்கும் இடையில்  நாளை (29.08) ஜனாதிபதி செயலகத்தில் விசேட கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

நாளை மாலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் பல முக்கிய விடயங்கள் ஆராயப்படுமென அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக அமைச்சரவை தொடர்பிலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வருகை தொடர்பிலான ஏற்பாடுகள் தொடர்பிலும் பேசப்படுமென நம்பப்படுகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version