இறந்த அண்ணனுக்காக அன்னதானம் வழங்க சென்ற தங்கை பலி

ஹசலக்க, கங்கேயாய, பஹே எல பகுதியில் மாணவி ஒருவர் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி இன்று (28) காலை உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியை சேர்ந்த அனுத்தரா இந்துனில் என்ற 16 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14 நாட்களுக்கு முன்பு இறந்த தன் சகோதரனுக்காக அன்னதானம் வழங்குவதற்காக தன் பெற்றோருடன் விகாரைக்கு சென்றுகொண்டிருந்த போதே இவ்வாறு காட்டு யானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

தொடர்ந்து, அவர் ஹசலக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version