-டுபாயிலிருந்து விமல்-
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
லோகேஷ் ராகுல் | Bowled | நவாஸ் தஹானி | 00 | 01 | 0 | 0 |
ரோகித் சர்மா | பிடி – இப்திகார் அகமட் | முகமட் நவாஸ் | 12 | 18 | 0 | 1 |
விராட் கோலி | பிடி – இப்திகார் அகமட் | முகமட் நவாஸ் | 34 | 31 | 3 | 1 |
ரவீந்தர் ஜடேஜா | 08 | 05 | 0 | 1 | ||
ர்யகுமார் யாதவ் | 02 | 02 | 0 | 0 | ||
உதிரிகள் | 05 | |||||
ஓவர் 10 | விக்கெட் 03 | மொத்தம் | 62 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
நசீம் ஷா | 02 | 00 | 08 | 01 |
நவாஸ் தஹானி | 02 | 00 | 13 | 00 |
ஹரிஸ் ரவுஃப் | 02 | 00 | 13 | 00 |
ஷதாப் கான் | 02 | 00 | 03 | 00 |
முகமட் நவாஸ் | 02 | 00 | 18 | 02 |
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் டுபாய் சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 148 எனும் வெற்றி இலக்கினை இந்தியாவுக்கு வழங்கியுள்ளது.
ஆரம்பத்தில் தடுமாறிய பாகிஸ்தான் அணி, மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களின் ஓட்டங்கள் மூலம் போராடக்கூடிய ஓட்ட எண்ணிக்கை ஒன்றினை பெற்றுக் கொண்டு வரும் போது ஹார்டிக் பாண்ட்யா மூன்று விக்கெட்களை கைப்பற்றி மீண்டும் பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தை தடுமாற வைத்தார். பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அஸாம் பிரகாசிக்க தவறியமை பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்தியாவின் பந்து வீச்சும், களத்தடுப்பும் ஆரம்பம் முதலே சிறப்பாக அமைந்தமையினால் பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தை கட்டுப்படுத்த முடிந்தது. புவனேஷ்வர் குமாரது ஆரம்பம் பாகிஸ்தான் அணிக்கு அழுத்தத்தை பெரியளவில் வழங்கியது.
நேற்றைய இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியிலும் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி தடுமாற, ஆப்கானிஸ்தான் அணி அபாரமாக அடித்தாடி வெற்றி பெற்றது. அதே போன்ற நிலையே இன்றும் ஏற்பட்டுளளதாக தென்படுகிறது.
ஆடுகளத்தில் இரவு வேளையில் ஈரலிப்பு தன்மை காணப்படாமையினால் இரண்டாவதாக துடுப்பாடும் அணிக்கும் வாய்ப்புகள் இருப்பதாகவே நம்பப்படுகிறது. அதன் காரணமாகவே இந்தியா அணி களத்தடுப்பை முதலில் தெரிவு செய்தது.
இந்தியா அணிக்கு போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பு காணப்படும் நிலையில் பாகிஸ்தான் அணி போராடினால் இரண்டாம் இன்னிங்ஸ் மிகவும் விறு விறுப்பை தருமென நம்பப்படுகிறது.
இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
25,000 ரசிகர்களை உள்ளடக்க கூடிய இந்த மைதானம் நிறைந்து காணப்படுவதுடன், இந்தியா அணிக்கு மைதானம் நிறைந்த ஆதரவு காணப்படுகிறது.
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
முகமட் ரிஸ்வான் | பிடி- அவேஷ் கான் | ஹார்டிக் பாண்ட்யா | 43 | 42 | 4 | 1 |
பாபர் அசாம் | பிடி – அர்ஷ்தீப் சிங் | அர்ஷ்தீப் சிங் | 10 | 09 | 2 | 0 |
ஃபகார் ஷமான் | பிடி- தினேஷ் கார்த்திக் | அவேஷ் கான் | 10 | 06 | 2 | 0 |
இப்திகார் அகமட் | பிடி- தினேஷ் கார்த்திக் | ஹார்டிக் பாண்ட்யா | 28 | 22 | 2 | 1 |
குஷ்தில் ஷா | பிடி- ரவீந்தர் ஜடேஜா | ஹார்டிக் பாண்ட்யா | 02 | 07 | 0 | 0 |
ஷதாப் கான் | L.B.W | புவனேஷ்வர் குமார் | 10 | 09 | 1 | 0 |
ஆஷிப் அலி | சூர்யகுமார் யாதவ் | புவனேஷ்வர் குமார் | 09 | 07 | 1 | 0 |
முகமட் நவாஸ் | பிடி- தினேஷ் கார்த்திக் | அர்ஷ்தீப் சிங் | 01 | 03 | 0 | 0 |
ஹரிஸ் ரவுஃப் | 13 | 07 | 2 | 0 | ||
நசீம் ஷா | L.B.W | புவனேஷ்வர் குமார் | 00 | 01 | 0 | 0 |
நவாஸ் தஹானி | Bowled | அர்ஷ்தீப் சிங் | 14 | 06 | 0 | 2 |
உதிரிகள் | 05 | |||||
ஓவர் 20 | விக்கெட் 10 | மொத்தம் | 147 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
புவனேஷ்வர் குமார் | 04 | 00 | 26 | 04 |
அர்ஷ்தீப் சிங் | 03.5 | 00 | 33 | 01 |
ஹார்டிக் பாண்ட்யா | 04 | 00 | 25 | 03 |
அவேஷ் கான் | 02 | 00 | 19 | 01 |
யுஸ்வேந்திர சாஹல் | 04 | 00 | 32 | 00 |
ரவீந்தர் ஜடேஜா | 02 | 00 | 11 | 00 |