இந்தியா, பாகிஸ்தான் – பாகிஸ்தான் துடுப்பாட்டம் நிறைவு

-டுபாயிலிருந்து விமல்-

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
லோகேஷ் ராகுல்Bowledநவாஸ் தஹானி000100
ரோகித் சர்மாபிடி – இப்திகார் அகமட்முகமட் நவாஸ்121801
விராட் கோலிபிடி – இப்திகார் அகமட்முகமட் நவாஸ்343131
ரவீந்தர் ஜடேஜா  08 05  1
ர்யகுமார் யாதவ்   02 02 0 0
       
       
       
       
       
       
உதிரிகள்  05   
ஓவர்  10விக்கெட்  03மொத்தம்62   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
நசீம் ஷா02000801
நவாஸ் தஹானி02001300
ஹரிஸ் ரவுஃப்02001300
ஷதாப் கான்02000300
முகமட் நவாஸ்02001802
     
     

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் டுபாய் சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 148 எனும் வெற்றி இலக்கினை இந்தியாவுக்கு வழங்கியுள்ளது.

ஆரம்பத்தில் தடுமாறிய பாகிஸ்தான் அணி, மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களின் ஓட்டங்கள் மூலம் போராடக்கூடிய ஓட்ட எண்ணிக்கை ஒன்றினை பெற்றுக் கொண்டு வரும் போது ஹார்டிக் பாண்ட்யா மூன்று விக்கெட்களை கைப்பற்றி மீண்டும் பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தை தடுமாற வைத்தார். பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அஸாம் பிரகாசிக்க தவறியமை பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்தியாவின் பந்து வீச்சும், களத்தடுப்பும் ஆரம்பம் முதலே சிறப்பாக அமைந்தமையினால் பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தை கட்டுப்படுத்த முடிந்தது. புவனேஷ்வர் குமாரது ஆரம்பம் பாகிஸ்தான் அணிக்கு அழுத்தத்தை பெரியளவில் வழங்கியது.

நேற்றைய இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியிலும் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி தடுமாற, ஆப்கானிஸ்தான் அணி அபாரமாக அடித்தாடி வெற்றி பெற்றது. அதே போன்ற நிலையே இன்றும் ஏற்பட்டுளளதாக தென்படுகிறது.

ஆடுகளத்தில் இரவு வேளையில் ஈரலிப்பு தன்மை காணப்படாமையினால் இரண்டாவதாக துடுப்பாடும் அணிக்கும் வாய்ப்புகள் இருப்பதாகவே நம்பப்படுகிறது. அதன் காரணமாகவே இந்தியா அணி களத்தடுப்பை முதலில் தெரிவு செய்தது.

இந்தியா அணிக்கு போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பு காணப்படும் நிலையில் பாகிஸ்தான் அணி போராடினால் இரண்டாம் இன்னிங்ஸ் மிகவும் விறு விறுப்பை தருமென நம்பப்படுகிறது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

25,000 ரசிகர்களை உள்ளடக்க கூடிய இந்த மைதானம் நிறைந்து காணப்படுவதுடன், இந்தியா அணிக்கு மைதானம் நிறைந்த ஆதரவு காணப்படுகிறது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
முகமட் ரிஸ்வான்பிடி- அவேஷ் கான்ஹார்டிக் பாண்ட்யா434241
பாபர் அசாம்பிடி – அர்ஷ்தீப் சிங்  அர்ஷ்தீப் சிங்  100920
ஃபகார் ஷமான்பிடி- தினேஷ் கார்த்திக்அவேஷ் கான்100620
இப்திகார் அகமட்பிடி- தினேஷ் கார்த்திக்ஹார்டிக் பாண்ட்யா282221
குஷ்தில் ஷாபிடி- ரவீந்தர் ஜடேஜாஹார்டிக் பாண்ட்யா020700
ஷதாப் கான்L.B.Wபுவனேஷ்வர் குமார்100910
ஆஷிப் அலிசூர்யகுமார் யாதவ்புவனேஷ்வர் குமார்090710
முகமட் நவாஸ்பிடி- தினேஷ் கார்த்திக்அர்ஷ்தீப் சிங்010300
ஹரிஸ் ரவுஃப்  13 07 2 0
நசீம் ஷா  L.B.Wபுவனேஷ்வர் குமார்000100
நவாஸ் தஹானி Bowled அர்ஷ்தீப் சிங் 14 06 0 2
உதிரிகள்  05   
ஓவர்  20விக்கெட்  10மொத்தம்147   

பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
புவனேஷ்வர் குமார்04002604
அர்ஷ்தீப் சிங்03.5003301
ஹார்டிக் பாண்ட்யா04002503
அவேஷ் கான்02001901
யுஸ்வேந்திர சாஹல்04003200
ரவீந்தர் ஜடேஜா02001100

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version