-டுபாயிலிருந்து விமல்-
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் டுபாய் சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற வரும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் போட்டியில் பாகிஸ்தான் அணியை 05 விக்கெட்களினால் இந்தியா அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி அவர்களுக்கான அடுத்த சுற்றை இலகுபடுத்தியுள்ளது.
இந்தியா அணியின் முதலாவது விக்கெட் 01 ஓட்டத்தில் வீழ்த்தப்பட ரோஹித் ஷர்மா, கோலி இணைப்பாடம் ஒன்றை ஏற்படுத்தினார். ஆனாலும் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க தடுமாறிய இந்தியா அணியினை சூர்யகுமார் யாதவ், ரவீந்தர் ஜடேஜா ஆகியோர் மத்திய வரிசையில் இணைப்பாட்டத்தை கட்டியயெழுப்பி இந்திய அணியின் வெற்றியினை இலகுபடுத்தினர்.
ஜடேஜா மாத்திரமே துடுப்பாட்ட வீரர்களில் இடதுகர துடுப்பாட்ட வீரர் என்ற காரணத்தினால் நான்காம் இடத்தில துடுப்பாட்ட அனுப்பப்பட்டார். அவரது துடுப்பாட்டம் இந்தியா அணிக்கு கைகொடுத்தது. ஆரம்பத்தில் நிதானமாக துடுப்பாடிய இந்தியா அணி இறுதியில் அதிரடி காட்டி வெற்றி பெற்றது.
இந்தியா அணியின் உலக கிண்ண தயார்படுத்தல்களில் கோலியின் நிலை என்ன என்ற குழப்ப நிலையினை தீர்க்க கூடிய வகையில் கோலி துடுப்பாடினார். அரைச்சதத்துடன் நிறைவு செய்திருப்பின் இன்னமும் சிறப்பாக அவரின் போர்ம் வெளிக்காட்டப்பட்டிருக்கும்.
பாகிஸ்தான் அணி முன்னதாக துடுப்பாடிய போது ஆரம்பத்தில் தடுமாறிய பாகிஸ்தான் அணி, மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களின் ஓட்டங்கள் மூலம் போராடக்கூடிய ஓட்ட எண்ணிக்கை ஒன்றினை பெற்றுக் கொண்டு வரும் போது ஹார்டிக் பாண்ட்யா மூன்று விக்கெட்களை கைப்பற்றி மீண்டும் பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தை தடுமாற வைத்தார். பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அஸாம் பிரகாசிக்க தவறியமை பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்தியாவின் பந்து வீச்சும், களத்தடுப்பும் ஆரம்பம் முதலே சிறப்பாக அமைந்தமையினால் பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தை கட்டுப்படுத்த முடிந்தது. புவனேஷ்வர் குமாரது ஆரம்பம் பாகிஸ்தான் அணிக்கு அழுத்தத்தை பெரியளவில் வழங்கியது.
இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
25,000 ரசிகர்களை உள்ளடக்க கூடிய இந்த மைதானம் நிறைந்து காணப்படுவதுடன், இந்தியா அணிக்கு மைதானம் நிறைந்த ஆதரவு காணப்பட்டது.
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
லோகேஷ் ராகுல் | Bowled | நசீம் ஷா | 00 | 01 | 0 | 0 |
ரோகித் சர்மா | பிடி – இப்திகார் அகமட் | முகமட் நவாஸ் | 12 | 18 | 0 | 1 |
விராட் கோலி | பிடி – இப்திகார் அகமட் | முகமட் நவாஸ் | 34 | 31 | 3 | 1 |
ரவீந்தர் ஜடேஜா | Bowled | முகமட் நவாஸ் | 34 | 27 | 2 | 2 |
சூர்யகுமார் யாதவ் | Bowlded | நசீம் ஷா | 18 | 18 | 1 | 0 |
ஹார்டிக் பாண்ட்யா | 33 | 17 | 4 | 1 | ||
உதிரிகள் | 14 | |||||
ஓவர் 19.4 | விக்கெட் 05 | மொத்தம் | 148 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
நசீம் ஷா | 04 | 00 | 27 | 02 |
நவாஸ் தஹானி | 04 | 00 | 29 | 00 |
ஹரிஸ் ரவுஃப் | 04 | 00 | 35 | 00 |
ஷதாப் கான் | 02 | 00 | 03 | 00 |
முகமட் நவாஸ் | 03.4 | 00 | 33 | 03 |