தற்போது இலங்கையில் 6.3 மில்லியன் மக்கள் அல்லது 10 பேரில் மூவர் உணவு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.
மேலும் தற்போது நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையின் காரணமாக கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் 05 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்படுவதாக அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய நடுத்தர வருமான நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் 05 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் போசாக்கின்மையானது அதிகமாக இருப்பதாகவும், அந்த வயதில் உள்ள குழந்தைகளில் 17 வீதமானோர் வளர்ச்சி குன்றியவர்களாக உள்ளதாகவும் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் பிரகாரம் இது மிகவும் மோசமான நிலைமை எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
மேலும், சுமார் 1.5 மில்லியன் பேருக்கு அவசர உணவு உதவி தேவைப்படுவதாகவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.