இரத்மலானையில் நேற்று காலை (01.09) இரும்பு கம்பியால் தாக்கி தனது தந்தையை கொன்று தாயாரை காயப்படுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட பிரச்சினை ஒன்றின் காரணமாக சந்தேக நபர் தனது பெற்றோர்களை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்து இரண்டு வருடங்களாக நோய் காரணமாக படுக்கையில் இருந்த தந்தை ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த தாயார் சிகிச்சைகளுக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் இரத்மலானை பகுதியை சேர்ந்த 70 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.