2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தரம் 5 புலமை பரிசில் பரீட்சை இவ்வருடம் டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் க.பொ.த உயர்தர பரீட்சைகள் இவ்வருடம் டிசம்பர் 05 ஆம் திகதி முதல் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.