பயண ஆலோசனையை தளர்த்திய கனடா

இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்து இலங்கையை செம்மஞ்சள் பட்டியலில் இருந்து மஞ்சள் நிற பட்டியலுக்கு குறைத்து இலங்கைக்கான பயண ஆலோசனையை கனடா தளர்த்தியுள்ளது.

இதற்கு முன்னதாக இலங்கைக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு கனடா தமது நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தியிருந்தது.

அதனை தற்போது தளர்த்தி அதிக அவதானத்துடன் செயற்படுமாறு தமது நாட்டு பிரஜைகளுக்கு கனடா தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கையில் எரிபொருள்,உணவு,மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதன் காரணமாக இலங்கையானது மஞ்சள் பட்டியலில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கு பின்னர் பிரான்ஸ்,சுவிட்சர்லாந்து,பிரித்தானியா மற்றும் நோர்வே உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்கான பயண கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version