காங்கேசன்துறையில் மீண்டும் இராணுவம் காணிகளை பிடிக்கிறதா? சுமந்திரன் நேரடி விஜயம்

காங்கேசன் துறையில் இராணுவத்தினரால் புதிய வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேலிகள் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட காணிகளை மீண்டும் கையகப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. நேற்று (27.09) இந்த வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.


இந்த நிலையில் குறித்த இடத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன், அமைக்கப்பட்ட வேலிகளை பார்வையிட்டார்.


இந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன், இவ்வாறு தெரிவித்துள்ளார்.
27/09/2021 காங்கேசன்துறையில் 2018 ஆண்டு இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணி மீண்டும் கையகப்படுத்தும் நோக்குடன் இராணுவத்தினரால் வேலி அமைக்கப்படுவதாக வலிகாமம் வடக்கு பிரதேசபை தவிசாளர் சோ.சுகிர்தனால், தன்னிடம் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து நேரடியாகச் சென்று பார்வையிட்டதாக தெரிவித்தார்.

காங்கேசன்துறையில் மீண்டும் இராணுவம் காணிகளை பிடிக்கிறதா? சுமந்திரன் நேரடி விஜயம்
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version