தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டதும் அரசாங்க மற்றும் தனியார் துறைகளுக்கான கடமை நேரங்களில் மாற்றம் ஏற்படலாம் என தெரியவருகிறது. ஒரே நேரத்தில் அனைவரும் வீடுகளிலிருந்து வெளியே வருவதனால் ஏற்படும் நெரிசலை குறைக்கவும், பொது போக்குவரத்து சேவைகளில் ஏற்படும் நெரிசலை தடுக்கவும் இந்த முடிவு எடுக்கப்படவுள்ளது.
அதனடிப்படையில் அரச அலுவலகங்கள் காலை 9 மணிக்கும், தனியார் அலுவலகங்கள் காலை 10 மணிக்கும் ஆரம்பிக்கவுள்ளன. பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டால் அவை 7.30 இற்கு ஆரம்பிக்கும். எனவே சன நெரிசலை குறைக்க இந்த திட்டம் உதவும். அதன் காரணமாக கொரோனா தொற்று பரவும் தன்மை குறைவடையும்.
நாடு திறக்கப்பட்டதும் அறிமுகம் செய்யவுள்ள புதிய நடைமுறைகளில் இதுவும் முக்கியமானதாக இருக்கும் என நம்பப்படுகிறந்து.
சுகாதா வழிகாட்டல் மற்றும் நடைமுறைபடுத்துதல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னரே இந்த அறிவித்தலின் இறுதி நிலைமை தெரியவரும்.