ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி ஐக்கிய அரபு அமீரகம், டுபாயில் நடைபெற்று வருகிறது.
இந்தியா அணியின் துடுப்பாட்ட வீரர்கள் விராத் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் அபாரமான ஆரம்பத்தை இந்தியா அணிக்கு வழங்கினர். 119 ஓட்டங்களை ஆரம்ப இணைப்பாட்டமாக பெற்றனர். 62 ஓட்டங்களுடன் ராகுல் ஆட்டமிழக்க, விராத் கோலி தொடர்ந்த்தும் அபாரமாக துடுப்பாடினார்.
விராத் கோலி 20-20 சர்வதேச போட்டிகளில் முதலாவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். சர்வதேசப் போட்டிகளில் 2019 ஆண்டு நவம்பர் 22 ஆம் திகதிக்கு பின்னர் பெற்ற முதலாவது சதம் இதுவாகும்.
ஃபசல் ஹக் ஃபரூக்கி ஒரே ஓவரில் அடுத்ததடுத்து விக்கெட்களை கைப்பற்றி இந்தியா அணியினை சிறிய தடுமாற்றத்துக்குக்கு உள்ளாகினர். இருந்தாலும் கோலி தொடர்ந்தும் அதிரடியாக அடித்தாடி இந்தியா அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் ஆப்கானிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| லோகேஷ் ராகுல் | பிடி – இப்ராஹிம் சர்டான் | ஃபசல் ஹக் ஃபரூக்கி | 62 | 41 | 6 | 2 |
| விராட் கோலி | 122 | 61 | 11 | 4 | ||
| சூர்யகுமார் யாதவ் | Bowled | ஃபசல் ஹக் ஃபரூக்கி | 00 | 01 | 0 | 0 |
| ரிஷாப் பான்ட் | 20 | 16 | 3 | 0 | ||
| உதிரிகள் | 02 | |||||
| ஓவர் 20 | விக்கெட் 02 | மொத்தம் | 212 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| ஃபசல் ஹக் ஃபரூக்கி | 04 | 00 | 51 | 00 |
| முஜீப் ஊர் ரஹ்மான் | 04 | 00 | 29 | 00 |
| பரீட் அஹமட் மாலிக் | 04 | 00 | 57 | 02 |
| ரஷீட் கான் | 04 | 00 | 33 | 00 |
| முகமட் நபி | 03 | 00 | 34 | 00 |
| அஸ்மதுல்லா ஒமர்சாய் | 01 | 00 | 08 | 00 |