இலங்கைக்கு வரிச்சலுகை வழங்க கூடாது – த.தே கூட்டமைப்பு – ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இடையில் நேற்று(28.09) சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது இலங்கைக்கு வரிச்சலுகை வழங்க கூடாது என்ற கோரிக்கையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினருக்கு முன் வைத்ததாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் வி தமிழுக்கு தெரிவித்தார்.

நாம் அவரை தொடர்பு கொண்டு கேட்ட போது “ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இலங்கைக்கு வரிச்சலுகை வழங்க கூடாது என்ற முடிவினை தொடர வேண்டும். இலங்கையில் பயங்கரவாத தடைசட்டம் நீக்கப்படவேண்டும், பயங்கரவாத தடை சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டு 25 வருடங்களுக்கு மேலாக கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துபவர்கள், அஞ்சலி செலுத்தும் புகைப்படங்களை பதிவிடுகிறவர்கள் கைது செய்யபப்டுகின்றனர்.

இராணவம் தொடர்ந்தும் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளை செய்து வருகிறது. இராணுவ தலையீடு சகல விடயங்களிலும் மிக மோசமாக உள்ளது.

திணைக்களங்களுக்குள்ளும் அவர்களது தலையீடு மிக அதிகமாக உள்ளது. மக்கள் அடக்கு முறைக்கு உட்படுத்தபப்டுகினறனர்.

தொல் பொருளிலயல் திணைக்களம், வன வள திணைக்களம் போன்ற திணைக்களங்கள் தமிழ் மக்களின் காணிகளை கைப்பற்றும் செயற்பாடுகளை செய்து வருகின்றனர்.

ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட சட்டம் தொடர்பான ஆலோசனை குழுவில் தமிழர்கள் எவரும் உள்ளடக்கப்படவில்லை. அரசியல் ரீதியாக எந்தவித முன்னேற்றங்களுமில்லை. மக்கள் மிக பெரியளவில் கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்.

இப்படி பல காரணங்கள் உள்ளமையினால், ஐரோப்பிய ஒன்றியம் வரி சலுகையினை வழங்காது நிறுத்தி இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்மந்தன் தலைமையில் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் இந்த சந்திப்பில் பங்குபற்றியிருந்தனர்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான M.A சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரன் ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இலங்கைக்கு வரிச்சலுகை வழங்க கூடாது - த.தே கூட்டமைப்பு - ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version