சமாதான நீதவான்களாக மட்டக்களப்பில் ஏழு பேர் நியமனம்

-அகல்யா டேவிட்-
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் 28.09.2021(செவ்வாய்க்கிழமை) சமாதான நீதவான்களிற்கான(JP) நியமனங்களை வழங்கிவைத்தார்.

அவரது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
ஆறுமுகம் தேவராசா, நவரெத்தினம் திருநாவுக்கரசு, கருணாகரன் சங்கீதா, தில்லைநாதன் நித்திஸ்வரன், சிவமார்கண்டு கஜாகரன், ராமமூர்த்தி நிசாந்தன், பாக்கியராஜா தினேஸ்குமார் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் மாவட்ட நீதவான் முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவான்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

சமாதான நீதவான்களாக மட்டக்களப்பில் ஏழு பேர் நியமனம்
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version