குருந்தூர் மலை விவகாரம் – அராஜகம் தொடர்கிறதா?

சற்று முன்னர்(21.09) முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் இரத்தினராசா மயூரன் ஆகியோர் முல்லைத்தீவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த மத கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் இன்று (21.09) குருந்தூர்மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இவ்வார்ப்பாட்டத்தில் மக்களோடு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், முன்னாள் கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத் தலைவரும், சமூகசெயற்பாட்டாளருமான இரத்தினராசா மயூரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ரவிகரன் மற்றும், மயூரன் ஆகியோரை முல்லைத்தீவு பொலிஸார் , அழைப்பு விடுத்திருந்த நிலையில் அங்கு சென்றவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version